குமாரபாளையத்தில் 73 வாக்கு சாவடிகளில் விறுவிறு ஓட்டுப்பதிவு
குமாரபாளையத்தில் 73 ஓட்டுச்சாவடிகளில் விறுவிறுவென ஓட்டுப்பதிவு நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் 73 ஓட்டுச்சாவடிகளில் விறுவிறுவென ஓட்டுப்பதிவு நடைபெற்றது.
குமாரபாளையம் நகர்மன்ற தேர்தலில் 33 வார்டுகளுக்கு 188 பேர் போட்டியிடுகின்றனர். ஆண் வாக்காளர்கள் 32 ஆயிரத்து 445, பெண் வாக்காளர்கள் 35 ஆயிரத்து 002, இதர பிரிவினர் 17 ஆக மொத்தம் 67 ஆயிரத்து 447 பேர் உள்ளனர். மதியம் 01:00 மணிக்கே 50 சதவீதமும், 03:00 மணிக்கு 64.50 சதவீதமும் ஓட்டுக்கள் பதிவாகின. ஆண்களை விட பெண்கள் அதிகம் பேர் திரண்டு நீண்ட வரிசையில் நின்று ஓட்டுக்களை பதிவு செய்தனர்.
குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் ரவி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். ஏ.டி.எஸ். பி. செல்லபாண்டியன் அனைத்து ஓட்டு சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டார். அரசு ஆண்கள் மேனிலைப்பள்ளி வளாகத்தில் 4 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டதால், அங்கு ஓட்டு பதிவு செய்ய வந்த வாக்காளர்கள் தங்கள் டூவீலர்களை பள்ளிக்கு வெளியில் நிறுத்திவிட்டு வந்ததால், அவ்வழியே கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பள்ளியின் வெளியில் அனைத்து ஓட்டுச்சாவடிக்கு உரிய வேட்பாளர்களின் அதரவாளர்கள் தற்காலிக அலுவலகம் அமைத்து ஓட்டுப் பதிவு செய்ய வரும் நபர்களிடம் தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு தாருங்கள் என கேட்டுக்கொண்டனர்.