குமார பாளையம் தொடக்கப்பள்ளியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா

குமாரபாளையம் தொடக்கப்பள்ளியில் விடியல் ஆரம்பம் சார்பில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2022-01-13 03:14 GMT
குமார பாளையம் தொடக்கப்பள்ளியில் விவேகானந்தர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் புத்தர் வீதி, நகராட்சி தொடக்கப்பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்வில்விவேகானந்தர் பிறந்த நாள் விழா விடியல் ஆரம்பம் சார்பாக அமைப்பாளர் பிரகாஷ் தலைமையில் கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி விழாவை துவக்கி வைத்தார். விவேகானந்தர் திருவுருவப்படத்திற்கு மலர்மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

அப்பகுதியில் வசிக்கும் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பேச்சுப் போட்டி, ஓவியப் போட்டி, நாடக போட்டி, மற்றும் மாறுவேட போட்டி வைக்கப்பட்டு,வெற்றி பெற்ற மாணவ மாணவர்களுக்கு பி.டி.ஏ. தலைவர் வாசுதேவன் பரிசுகள் வழங்கினார்.

மாணவ,மாணவியர்களுக்கு முக கவசம் மற்றும் கிருமிநாசினிகள் கொடுக்கப்பட்டது.இதில் மணி கிருஷ்ணா,வினோத், தன்னார்வலர்கள் கார்த்திகா ஆனந்தி,உதவிக்கரம் அங்கப்பன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News