குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் 50 மரக்கன்று நடப்பட்டது
குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாமில் 50 மரக்கன்று நடுதல் நிகழ்வு நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விஷ்வ இந்து பரிஷத் மாநில பண்பு பயிற்சி முகாம் மாநில செயலர் இளங்கோ தலைமையில் நடைபெற்றது.
இது பற்றி கோட்ட பொறுப்பாளர் அழகிரி கூறும்போது
பஜ்ரங்தள் முகாம், விஷ்வ இந்து பரிசத் 10 நாட்கள் முகாம் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த முகாம்களில் இளைஞர்களுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சிகள் வழங்கப்படும். சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. பாரத நாட்டின் பெருமைகள், நம் நாட்டின் கலைகளின் பெருமைகள், முன்னோர்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட பல தலைப்புகளில் பேசவுள்ளனர். நேற்று 50 மரக்கன்றுகள் நடப்பட்டது. ஆண்டாள் பக்தர்கள் பேரவை நிறுவன தலைவர் ஆண்டாள் சொக்கலிங்கம், தென் பாரத அமைப்பு செயலர் நாகராஜன், திருக்கோவில் மற்றும் திருமண அமைப்பின் தமிழக கேரளா அமைப்பாளர் சரவண கார்த்திக், மாநில அமைப்பு செயலர் இராமன், மாநில இணை செயலர் கிரண், மாவட்ட விவசாய அணி தலைவர் பன்னீர்செல்வம், பஜ்ரங்தள் மாநில நிர்வாகிகள் உள்பட பலரும் பங்கேற்றனர் என்றார்.