குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆலோசனை முகாம்

குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆலோசனை முகாம் நடைபெற்றது.;

Update: 2022-04-26 00:00 GMT
ஆலோசனையில் பங்கேற்றவர்கள். 

குமாரபாளையத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் ஆலோசனை முகாம் மாதாஜி பிரகலாம்பிகை தலைமையில் நடைபெற்றது. மே 8 முதல் 17 வரை நடைபெறவுள்ள பஜ்ரங்தள் முகாம், விஷ்வ ஹிந்து பரிசத் முகாம் குறித்து ஆலோசனை முகாம் ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்றது. இந்த முகாம்களில் இளைஞர்களுக்கு சிலம்பம், கராத்தே பயிற்சிகள் வழங்கப்படும். சிறப்பு பேச்சாளர்கள் பங்கேற்கும் கருத்தரங்கங்கள் நடைபெறும் என்று, கோட்ட பொறுப்பாளர் அழகிரி கூறினார்.

பாரத நாட்டின் பெருமைகள், நம் நாட்டின் கலைகளின் பெருமைகள், முன்னோர்கள் குறித்த தகவல்கள் உள்ளிட்ட பல தலைப்புகளில் பேசவுள்ளனர். இதில் ஆர்.எஸ்.எஸ். மாநில செயலர் ஜெகதீசன், விஷ்வ ஹிந்து பரிஷத் தமிழ்நாடு, கேரளா அமைப்பு செயலர் நாகராஜன், பெண்கள் பிரிவில் பிந்து அம்மா, விஷ்வ ஹிந்து பரிஷத் மாநில அமைப்பு செயலர் ராமன், உள்ளிட்ட தமிழகம் மற்றும் கேரளா மாநிலங்களில் இருந்து வந்து ஆலோசனைகள் வழங்கினர்.

Tags:    

Similar News