குமாரபாளையத்தில் நடன குதிரைகளுடன் விநாயகர் சதுர்த்தி தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையத்தில் 3 நடன குதிரைகளுடன் விநாயகர் சதுர்த்தி தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

Update: 2024-09-06 14:45 GMT

குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விநாயகர் சதுர்த்தி நாளையொட்டி 31 இடங்களில் விநாயகர் சிலைகள் கொலு வைத்து வழிபட போலீசார் அனுமதி அளித்துள்ளனர். 

இந்நிலையில், பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள கற்பக விநாயகர் கோயில் சார்பில் விநாயகர் சிலை கொலு வைக்கப்பட்டுள்ளது. விழாவையொட்டி காவிரி ஆற்றிலிருந்து தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. இதில் பெண்கள் பெருமளவில் பங்கேற்று தீர்த்தக்குடங்கள் எடுத்து வந்தனர்.

மேலும் 3 நடன குதிரைகள் நடனமாடியபடி வந்தது அனைவரையும் ரசிக்க வைத்தது. இதனைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னாள் அமைச்சர் தங்கமணியின் புதல்வர் தரணிதரன் பங்கேற்று சுவாமியை வழிபட்டார். விழாக்குழு நிர்வாகி சிங்காரவேல் உள்ளிட்ட பலரும் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News