குமாரபாளையம் தேமுதிக சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா
குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் கட்சியின் நிறுவனர் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.;
குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் நகர செயலர் ராஜு தலைமையில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
காவேரி நகர் பத்ரகாளியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. காவேரி நகர் பஸ் நிறுத்தம், குமாரபாளையம் பஸ் ஸ்டாண்ட் ஆகிய இடங்களில் கட்சிக் கொடியை மாவட்ட செயலர் விஜய்சரவணன் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.
அம்மா உணவகத்தில் 500 நபர்களுக்கு மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டது. 33 வார்டுகளிலும் கட்சிக்கொடியை அந்தந்த வார்டு நிர்வாகிகள் ஏற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
மகளிர் அணி சார்பில் கோலப்போட்டி, சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பொதுமக்களுக்கு முக கவசங்கள், கிருமிநாசினி மருந்து வழங்கப்பட்டன.