விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

குமாரபாளையத்தில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடினர்.;

Update: 2024-08-25 11:00 GMT

குமாரபாளையம் தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

விஜயகாந்த் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்


குமாரபாளையத்தில் தே.மு.தி.க நிறுவன தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக கொண்டாடினர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனத் தலைவரும், நடிகருமான மறைந்த கேப்டன் எனப்படும் விஜயகாந்த் பிறந்த தினத்தை வறுமை ஒழிப்பு தினமாக தே.மு.தி.க. சார்பில் குமாரபாளையத்தில் நகர செயலர் நாராயணசாமி, மாவட்ட பொருளர் மகாலிங்கம் தலைமையில் கொண்டாடப்பட்டது.


பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த நிகழ்வில் மாவட்ட செயலர் விஜயசரவணன் பங்கேற்று, விஜயகாந்த் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கட்சிக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு, இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி, சேலைகள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


மாவட்ட செயலர் விஜய்சரவணன் பேசியதாவது:

விஜயகாந்த் அனைவரது உள்ளத்தில் வாழ்ந்து கொண்டுள்ளார். அவர் வழியில் கட்சியை வழிநடத்தும் அண்ணியார் பிரேமலதாவின் ஆணைப்படி செயல்பட்டு, மக்கள் பணியாற்றுவோம். தலைவரின் புதல்வர்கள் கட்சிக்கு பக்கபலமாக உள்ளனர். வரும் தேர்தலில் தலைமைக்கழகம் அறிவிக்கும் வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க அயராது பாடுபடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் நகர, வார்டு நிர்வாகிகள், மகளிரணியினர் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

Similar News