குமாரபாளையத்தில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள்

குமாரபாளையத்தில் விஜய் பிறந்த நாளையொட்டி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Update: 2022-06-22 15:30 GMT

குமாரபாளையத்தில்  விஜய் பிறந்தநாளையொட்டி தளபதி எனும் வடிவில் நின்று வண்ண, வண்ண பலூன்கள் பறக்க விட்டனர்.

நடிகர் விஜய் மக்கள் இயக்க நிறுவனர் விஜய் 48வது பிறந்தநாளையொட்டி குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் உள் நோயாளிக்கு பால், பழங்கள் வழங்குதல், நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு அன்னதானம், சத்யா நகர் அன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் மதிய உணவு, பொதுமக்களுக்கு அன்னதானம், மாணவ, மாணவியர்களுக்கு நோட்டுகள், புத்தகங்கள், பென்சில்கள், பேனாக்கள் வழங்கல், கல்வி ஊக்கத்தொகை வழங்கல் உள்ளிட்ட பல நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. 3வது வார்டு பகுதியில் 48 மரக்கன்றுகள் நடப்பட்டன. பஸ் நிலையத்தில் 48 கிலோ கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், தளபதி எனும் வடிவில் நின்று வண்ண, வண்ண பலூன்கள் பறக்க விடப்பட்டன. நகர இளைஞரணி தலைவர் வேல்முருகன், செயலர் செல்வராஜ், பொருளர் பிரபு, நகர மாணவரணி தலைவர் நந்து, செயலர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News