மருத்துவ உதவியாக 25 ஆயிரம் வழங்கிய விஜய் கட்சியினர்!

குமாரபாளையத்தில் மருத்துவ உதவியாக 25 ஆயிரம் ரூபாயை விஜய் கட்சியினர் வழங்கினர்.;

Update: 2024-08-01 14:00 GMT

மருத்துவ உதவியாக 25 ஆயிரம் வழங்கிய விஜய் கட்சியினர்

குமாரபாளையத்தில் மருத்துவ உதவியாக 25 ஆயிரம் ரூபாயை விஜய் கட்சியினர் வழங்கினர்.

குமாரபாளையம் அம்பேத்கர் தெரு, காளியம்மன் கோவில் அருகே வசிக்கும் கலையரசன், பவித்ரா ஆகியோரின் பெண் குழந்தை சிவானி, 4, உதடு பிளவுபட்ட நிலையில் பேசமுடியாமல் இருந்தார். அறுவை சிகிச்சை மூலமாக 2021ல் பிளவுபட்ட உதடு சிகிச்சை செய்யப்பட்டது.தற்போது பேசமுடியாமல் இருப்பதால், தொண்டையில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவரின் ஆலோசனைப்படி ஆக. 3ல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி நிலையில் இருந்தனர். இந்நிலையில் உறுப்பினர் சேர்க்கை அணி மாநில செயலர் விஜயலட்சுமியை சந்தித்து மருத்துவ உதவி செய்யுமாறு பெற்றோர் கேட்டனர். அதன்படி, தமிழக வெற்றிக்கழக நிறுவனர் நடிகர் விஜய்,

பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனைப்படி, குழந்தை சிவானியின் வீட்டிற்கு நேரில் சென்று மருத்துவ செலவிற்காக .25 ஆயிரம் ரூபாய் வழங்கினர். இதில் நிர்வாகிகள் மோகன்ராஜ், வேல்முருகன், மகா பிரபு, வழக்கறிஞர் வினோத்,

சக்திவேல், பேபி, நாகவள்ளி,பிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குமாரபாளையத்தில் மருத்துவ உதவியாக 25 ஆயிரம் ரூபாயை

விஜய் கட்சியினர் வழங்கினர். 

Tags:    

Similar News