நூற்றாண்டு பழமையான ஆஞ்சநேயர் கோவிலை பாதுகாக்க விஷ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம்..!

குமாரபாளையத்தில் பழமையான ஆஞ்சநேயர் கோவிலை பாதுகாக்க விஷ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.;

Update: 2024-02-04 16:00 GMT

குமாரபாளையம் பாலக்கரை அப்புராயர் சத்திரம், ஆஞ்சநேயர் கோவிலில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சிறப்பு வழிபாடு மற்றும் ஆலோசனை கூட்டம் நடந்தது.

ஆஞ்சநேயர் கோவிலை பாதுகாக்க விஷ்வ ஹிந்து பரிஷத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

குமாரபாளையம் நகர் பகுதியில் பாலக்கரை பகுதியில் பல நூற்றாண்டு பழமையான அப்புராயர் சத்திரம் என்ற இடம் உள்ளது. இங்கு கிருஷ்ணதேவராயர் குதிரைகள் கட்டி, இளைப்பாறி உள்ளார் எனவும், இங்குள்ள ஆஞ்சநேயர் கோவிலில் . பல மன்னர்கள் சுவாமியை வணங்கியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

நேற்று இந்த கோவில் வளாகத்தில் விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இந்த கோவிலை பழமை மாறாமல் இந்து சமய அறநிலைத்துறை பராமரிக்க வேண்டும், வழிபாடு செய்யவரும் பக்தர்களுக்கு உதவிடும் வகையில் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும், தினமும் மூன்று கால பூஜை செய்யப்பட வேண்டும், என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிர்வாகிகள் சபரிநாதன், வேணுகோபால் முருகன் சீனிவாசன் ராஜ் சரவணன் சிவா சபரிராஜன் உள்பட தாய்மார்கள் பெருமளவில் பங்கேற்றனர். முன்னதாக சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டு, பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குமாரபாளையம் தாலுகா விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

குமாரபாளையம் தாலுகா விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆலோசனை கூட்டம் தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக கோட்ட செயலர் சபரிநாதன் பங்கேற்றார்.

குமாரபாளையம் தாலுகா பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் திருக்கோயில் சொத்துக்களை ஆக்கிரமிப்பு செய்த நபர்களை உடனே வெளியேற்ற வேண்டும், மாவட்டத்தில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்திலும் ஒரு கால பூஜை நடத்தும் திட்டத்தை தமிழக அரசு உடனே நடைமுறைப்படுத்த வேண்டும்.

பல்வேறு பகுதியில் ஜெப கூடாரங்கள் மற்றும் மசூதிகள் புதிதாக உருவாக்கப்படுகிறதா? என்று மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்ய வேண்டும், கோட்டைமேடு தாமோதர பெருமாள் கோவிலில் நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து சுமுக தீர்வு கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும், என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் நிர்வாகிகள் வாசுதேவன், தங்கவேலு, சூர்யா, ஜீவானந்தன், நாச்சிமுத்து, மணிகண்டன், ராமசந்திரன் உள்பட பலர் பங்கேற்றனர். 

Tags:    

Similar News