வேட்புமனு தாக்கல் தீவிரம்.! மக்கள் வெள்ளத்தில் நகராட்சி அலுவலகம்

வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்றதால் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் வெள்ளம் அதிகரித்து காணப்பட்டது.

Update: 2022-02-03 10:00 GMT

வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்றதால் குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் கூட்டம்  அதிகரித்து காணப்பட்டது.

வேட்புமனு தாக்கல் தீவிரமாக நடைபெற்றதால், குமாரபாளையம் நகராட்சி அலுவலகத்தில் மக்கள் கூட்டம்  அதிகரித்து காணப்பட்டது.

தமிழக அரசு உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு பெற அனுமதி கொடுத்த நிலையில், குமாரபாளையம் நகராட்சியில் வேட்புமனுக்கள் பெறப்பட்டு வருகிறது. ஜன.28ல் துவங்கிய வேட்புமனு தாக்கலில் நேற்று வரை 41 மனுக்கள் பெறப்பட்டன. அமாவாசை மறுநாள் பாட்டியமை, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் வந்ததால், இந்த நாட்களில் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இன்று வேட்புமனு தாக்கல் இறுதி நாள் என்பதால் பா.ஜ.க., அ.ம.மு.க., தே.மு.தி.க. மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். இன்று பிரதான கட்சிகளின் வேட்புமனு தாக்கல் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News