குமாரபாளைம் பகுதியில் கால்நடை சிகிச்சை முகாம்: துண்டு பிரசுரங்கள் விநியோகம்

குமாரபாளையத்தில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. இதில் துண்டு பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டன.;

Update: 2021-12-23 12:45 GMT

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது.

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, வீரப்பம்பாளையம் பகுதியில் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெற்றது. பசுக்கள், எருமைகளுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டது.

மேலும் கால்நடைகள், கன்றுகள், வெள்ளாடுகள், செம்மறியாடுகலுக்கு குடற்புழு நீக்கம் செய்தல், மலடு நீக்க சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், சினை பரிசோதனை ஆகியன மேற்கொள்ளப்பட்டன. 50 கால்நடைகளுக்கு தாது உப்பு கலவை வழங்கப்பட்டது.

முகாமில் பங்கேற்ற கால்நடை வளர்ப்போருக்கு நாமக்கல் மண்டல, கால்நடை பராமரிப்பு துறை, இணை இயக்குனர் டாக்டர் பொன்னுவேல், திருச்செங்கோடு கோட்ட கால்நடை பராமரிப்பு துறை, உதவி இயக்குனர் அருண்பாலாஜி, ஆகியோர் வழிகாட்டுதல் பேரில் கால்நடை நோய்கள் குறித்த துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

முகாம் பணிகளை குமாரபாளையம் கால்நடை மருந்தக, கால்நடை உதவி டாக்டர் செந்தில்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் மைதிலி மற்றும் தடுப்பூசி பணியாளர் ராஜேந்திரன் பங்கேற்று சிகிச்சை வழங்கினார்கள்.

கால்நடைகளை சிறப்பாக வளர்த்தவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tags:    

Similar News