வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா!

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பாக நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.;

Update: 2025-01-03 13:30 GMT

வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா!

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பாக நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன்

பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பில் புத்தகத் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது இதனை சிறப்பிக்கும் வகையில் நேற்று மாணவ மாணவிகள் வீரமங்கை ராணி வேலுநாச்சியார் மற்றும் மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மன் ஆகியோர் பிறந்த நாளில் அவர்களைப் போன்று மாறுவேடம் அணிந்து பங்கேற்று, அவ்விருவரின் பிறந்தநாள் விழா கொண்டாடினர்.

மாணவ மாணவிகள் மாறுவேடம் அணிந்து நகராட்சி அலுவலக வளாக மகாத்மா காந்தி சிலை முன்பிருந்து, பள்ளிபாளையம் பிரிவு ரோடு புத்தகத் திருவிழா அரங்கம் வரை ஊர்வலமாக வந்தார்கள்.

மாணவ மாணவிகள் நாடகம், மற்றும் பேச்சுப் போட்டியில், பங்கேற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் மற்றும் புத்தகங்களை அமைப்பாளர் விடியல் பிரகாஷ் வழங்கினார்.

இதற்கான ஏற்பாடுகளை ஜமுனா, ராணி, சித்ரா, பஞ்சாலை சண்முகம்,தீனா, செய்திருந்தார்கள் விழாவில் வாசகர்கள் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் பங்கேற்றனர்.

குமாரபாளையத்தில் விடியல் ஆரம்பம் சார்பாக நடந்து வரும் புத்தகத் திருவிழாவில் வேலுநாச்சியார், வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

Tags:    

Similar News