வடக்கு தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

குமாரபாளையத்தில் வடக்கு தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறக்கப்பட்டது;

Update: 2025-04-05 13:54 GMT

வடக்கு தி.மு.க. சார்பில் நீர் மோர்

பந்தல் திறப்பு


குமாரபாளையத்தில் வடக்கு தி.மு.க. சார்பில் நீர் மோர்

பந்தல் திறக்கப்பட்டது.

குமாரபாளையத்தில் வடக்கு தி.மு.க. சார்பில் நீர் மோர்

பந்தல் திறப்பு விழா நடந்தது. வடக்கு நகர பொறுப்பாளர், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன் தலைமை வகித்தார். பள்ளிபாளையம் பிரிவு பகுதியில் அமைக்கப்பட்ட நீர்மோர் பந்தலை சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, மாவட்ட தி.மு.க. செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. மூர்த்தி பங்கேற்று திறந்து வைத்தார். பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, அன்னாசி, முலாம்பழ ஜூஸ், நீர்மோர் ஆகியன வழங்கப்பட்டன. நகராட்சி துணை தலைவர் வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் செல்வராஜ், மாவட்ட பொருளர் ராஜாராம், முன்னாள் நகர செயலர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.

படவிளக்கம் : 

குமாரபாளையத்தில் வடக்கு தி.மு.க. சார்பில் நீர் மோர்

பந்தல் திறப்பு விழா நடந்தது.

Similar News