பவானி பகுதியில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
பவானி பகுதியில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் குறித்த விவரம் வெளியாகி உள்ளது.;
இது குறித்து பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: பவானி மற்றும் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த பகுதிகளில், கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம், இன்று நடைபெறவுள்ளது. இம்முகாம்களை பயன்படுத்தி முதல் மற்றும் இரண்டாம் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
முகாம் நடைபெறும் இடங்கள்:
ஜம்பை, ஆப்பக்கூடல், ஒடசக்கரை, மைலம்பாடி, பெரியபுலியூர், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, பவானி, ஒரிச்சேரிபுதூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஏ. புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ஏ. புதுப்பாளையம் சமுதாயக்கூடம், சி. கரட்டுபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சக்திநகர் துவக்கப்பள்ளி, ஆகிய இடங்களில் முகாம் நடக்கிறது.
அதேபோல், ஆப்பக்கூடல் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அய்யன்வலசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, சின்னமோளபாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, அம்மாபேட்டை,குருவரெட்டியூர் ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஆலாம்பாளையம், ஒலகடம் ஆரம்ப சுகாதார நிலையங்கள், சின்ன பருவாச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுவதாக, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.