குமாரபாளையத்தில் நாளை கொரோனா தடுப்பூசி போடப்படும் இடங்கள்

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நாளை தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.;

Update: 2021-08-28 17:00 GMT

பைல் படம்.

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் நாளை ( 29ம் தேதி ) கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.

குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதியில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் இடங்களின் விபரங்களை நகராட்சி நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, குமாரபாளையத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, நாராயனநகர் நகராட்சி நடுநிலைப்பள்ளி, குமாரபாளையம் அரசு மருத்துவமனை, பல்லக்காபாளையம் ஆரசு யூனியன் தொடக்கப்பள்ளி, ஆகிய இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறவுள்ளது.

இதேபோல், பள்ளிபாளையத்தில் ஆயக்காட்டூர் பள்ளி, வெடியரசம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி, பள்ளிபாளையம் அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி போடப்படுகிறது.

Tags:    

Similar News