குமாரபாளையத்தில் 20 இடங்களில் நடைபெற்ற தடுப்பூசி முகாம்கள்
குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி தடுப்பூசி முகாம் 20 இடங்களில் நடைபெற்றது.;
குமாரபாளையத்தில் 100 சதவீத நிறைவை நோக்கி இன்று தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
இதுகுறித்து நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், குமாரபாளையம் பகுதியில் 66 ஆயிரத்து 384 பேர் கொரோனா தடுப்பூசி போட தகுதியானவர்களாக உள்ளனர். தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத நபர்களுக்கு தடுப்பூசி முகாம் 20 இடங்களில் நடைபெற்றது. இதில் முதல் தவணை 217 பேர்களும், இரண்டாவது தவணை 645 பேர்களும் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.
மொத்த மக்கள் தொகையில் முதல் தவனை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 62 ஆயிரத்து 377 பேர்கள். இரண்டாவது தவணை தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 42 ஆயிரத்து 188 பேர்கள். சுகாதார பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் 33 வார்டுகளில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டி தினமும் வீடு வீடாக பிரச்சாரம் செய்து வருகிறார்கள். மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் இருக்கவும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றார்.