குமாரபாளையம் தாலுகாவில் இன்று தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
குமாரபாளையம் தாலுகாவில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், இன்று நடைபெறவுள்ள கொரோனா தடுப்பூசி முகாமில், கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்படுகிறது. இந்த தடுப்பூசி முகாமில், கர்ப்பிணி தாய்மார்களுக்கு மட்டுமே தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குமாரபாளையத்தில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் மற்றும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை வருமாறு:
எலந்தகுட்டை - 80,
கே.கே.வலசு - 60,
கொக்கராயன்பெட்டை - 50,
படைவீடு - 20,
காடச்சநல்லூர் -60,
பல்லக்காபாளையம் - 30,
குமாரபாளையம் - 60,
மரக்கால் காடு - 60,
பள்ளிபாளையம் - 50,
சௌதாபுரம் - 70