ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்
குமாரபாளையத்தில் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம்
குமாரபாளையத்தில் ஆடுகளுக்கு தடுப்பூசி முகாம் நடந்தது.
தற்போது மழைக்காலம் என்பதால் கால்நடைகளுக்கு பல்வேறு நோய்கள் வார வாய்ப்பாக உள்ளது. இதனை தடுக்க ஆண்டுதோறும் அனைத்து கால்நடைகளுக்கு, கால்நடைத்துறை மூலம் தடுப்பூசி போடப்படுவது வழக்கம். இதன் ஒரு கட்டமாக நேற்று குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை ஊராட்சி, கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் பகுதியில் ஆடுகளுக்கு தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இது குறித்து கால்நடை மருத்துவர் செந்தில்குமார் கூறியதாவது:
மழைக்காலங்களில் கால்நடைகளுக்கு பல்வேறு வியாதிகள் வர வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் விதமாக அதிகாரிகளின் உத்திரவின் பேரில், தடுப்பூசி போடப்பட்டு, நோய் தாக்குதலில் இருந்து காத்து வருகிறோம். அதன்படி ஆடுகளுக்கு இந்த மழைக் காலங்களில் ஆட்டுக்கொல்லி நோய் எனும் நோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்கும் விதமாக டி.டி.ஆர். எனப்படும் தடுப்பூசி போடும் முகாம் நடத்தப்பட்டு, இப்பகுதி வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் ஆகியவற்றிற்கு தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாமில் விவசாயிகள் ஆர்வத்துடன் தங்கள் ஆடுகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
இவ்வாறு அவர் கூறினார். இந்த முகாமில் சுமார் 200 க்கும் மேற்பட்ட ஆடுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.