அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாத்திர வியாபாரி உயிரிழப்பு!
குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் கீழே விழுந்த பாத்திர வியாபாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாத்திர வியாபாரி பலியானார்.;
அடையாளம் தெரியாத வாகனம் மோதி பாத்திர வியாபாரி பலி
குமாரபாளையத்தில் டூவீலர்கள் மோதிய விபத்தில் கீழே விழுந்த பாத்திர வியாபாரி மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பாத்திர வியாபாரி உயிரிழந்தார்.
குமாரபாளையம் அருகே வெப்படை பகுதியில் வசிப்பவர் ரவி, 58. பாத்திர வியாபாரி. இவர் நேற்றுமுன்தினம் மாலை 06:45 மணியளவில் தனது ஹோண்டா சைன் வாகனத்தில் பித்தளை பாத்திரங்கள் வாங்க குமாரபாளையம் நோக்கி, வெப்படை சாலை, காவடியான்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு எதிர் திசையில் வேகமாக வந்த பஜாஜ் பல்சர் ஓட்டுனர், ரவி வந்த வாகனம் மீது மோதியதில், நிலைதடுமாறிய ரவி கீழே விழ, அவ்வழியே வேகமாக வந்த நான்கு சக்கர, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த ரவி சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.
அக்கம் உள்ளவர்கள் தனியார் அம்புலன்ஸ் மூலம் ரவியின் உடலை குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரவியின் மகன் மனோஜ்குமார், 39, விபத்துக்கு காரணமான இரு வாகன ஓட்டுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இதன்படி வெப்படையை சேர்ந்த டூவீலர் ஓட்டுனர் கூலித் தொழிலாளி கவுரிசங்கர், 27, என்பவரை கைது செய்த போலீசார், விபத்துக்கு காரணமான நான்கு சக்கர வாகனம் குறித்து விசாரணை செய்து வருகிறார்கள்.