அடையாளம் தெரியாத பெண் சாவு
குமாரபாளையத்தில் அடையாளம் தெரியாத பெண் இறந்தார்.;
குமாரபாளையம் பழைய முருகன் தியேட்டர் பகுதியில் 55 வயது மதிக்கத்தக்க பெண் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவல் கிடைத்ததும் காலை 7 மணியளவில் எஸ்.ஐ. மலர்விழி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று சடலத்தை கைப்பற்றினர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.