குமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்

குமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.;

Update: 2024-04-07 17:30 GMT

குமாரபாளையத்தில் தி.மு.க. வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து உதயநிதி.பேசினார்.

குமாரபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

ஏப். 19ல் லோக்சபா தேர்தல் நடப்பதையொட்டி, அனைத்து கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். சில நாட்கள் முன்பு விஜயகாந்த் மனைவி பிரேமலதா, குமாரபாளையத்தில், அ,தி.மு.க. வேட்பாளர் ஆற்றல் அசோக்குமாரை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். நேற்று ஈரோடு தொகுதி தி.மு.க. வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதாவது:

ஈரோடு தொகுதியில் திமுக வேட்பாளர் பிரகாஷை பல லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் தமிழகத்தில் உள்ள அடிமை கூட்டணியை ஓட விடும் கூட்டணி தான் மதசார்பற்ற கூட்டணி தமிழகத்தில் உள்ளது சென்ற முறை மறைந்த கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தியை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். அதே போன்று இந்த முறை திமுக வேட்பாளரை எத்தனை லட்சம் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க போறீங்க. குறைந்தபட்சம் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

சட்டமன்றத் தேர்தலில் குமாரபாளையம் தொகுதி மக்கள் ஏமாந்து விட வேண்டாம். குமாரபாளையத்தில் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினர் இருந்தாலும், குமாரபாளையத்தில் புதிய பேருந்து நிலையம், வாரச்சந்தை, அறிவியல் நூலகம், உயர் மட்டபாலம், புதிய ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் சாய கழிவு பிரச்சனைக்கு பொதுசுத்தகரிப்பு மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆனங்கூர் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். 2014ம் ஆண்டு சிலிண்டர் விலை விட தற்போது ஆயிரம் ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆனால் மோடி 100 ரூபாய் குறைத்து விட்டு நாடகம் செய்கிறார்.

இந்திய கூட்டணி வெற்றி பெற்றால் டீசல், பெட்ரோல், சிலிண்டர் விலை குறைக்கப்படும், தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இது எல்லாம் நடக்க 19ம் தேதி திமுக சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.

2021ம் ஆண்டு ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் திமுக தலைவர் ஸ்டாலின் கொரோனா பெரும் தொற்று சமாளித்தார்., கோவிட் தடுப்பூசி குறித்து மக்கள் மத்தியில், தனக்கு ஊசியை செலுத்தி கொண்டு, பின்னர் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முதல் கையெழுத்து போட்டு, பெட்ரோல் விலை 3ரூபாய் குறைப்பு, மகளிர் இலவச பேருந்து சேவை, இதனால் மகளிர் பயனடைந்து வருகிறார்கள் அதை இப்போது ஸ்டாலின் பேருந்து என மகளிர் சொல்லி வருகிறார்கள்.

ஒரு திட்டத்தை எப்படி சிறப்பாக பயன்படுத்தி கொள்வது என்பது குறித்து பெண்களிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். இதை கர்நாடக மாநிலத்தில் விரிவுபடுத்தி உள்ளார்கள் இதுதான் திராவிட மாடல் அரசின் சாதனை. பெண் குழந்தைகள் பள்ளி, கல்லூரிகளில் படிக்க புதுமைப் பெண் திட்டம் கொண்டு வந்தார். இந்தியாவில் 24 சதவீதம் பேர் தான் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள். ஆனால் தமிழகத்தில் 54 சதவீதம் பெண்கள் வேலைக்கு செல்கிறார்கள்.

புதுமைப் பெண் திட்டம் ஆண்களைவிட பெண்கள் அதிக அளவில் கல்லூரி படிப்பு தொடர்கிறார்கள். 18ஆயிரம் மாணவிகள் நாமக்கல் மாவட்டத்தில் புதுமைப் பெண் திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள்.

திராவிட மாடல் அரசு என்பது அனைத்து மாநிலங்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பது. காலை உணவு திட்டம் தெலுங்கானா, கர்நாடக மாநிலம் மட்டுமின்றி கனடா நாட்டில் காலை உணவு திட்டம் செயல்படுத்த இருக்கிறார்கள் இதனால் உலகத்தில் உள்ள நாடுகளுக்கு எடுத்துக்காட்டாக திராவிட மாடல் அரசு உள்ளது., இதில் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 44 ஆயிரம் மாணவர்கள் காலை உணவு திட்டத்தில் பயன் பெற்று வருகிறார்கள்.

மகளிர் உரிமைத் தொகை மூலம் 1 கோடியே 60 லட்சம் பேரில் 1 கோடியே 17லட்சம் தகுதி செய்யப்பட்டு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்திற்கு 1ரூபாயாக மத்திய அரசுக்கு வருவாய் கொடுத்தால் நமக்கு 29 பைசா மட்டுமே நமக்கு திருப்பி கொடுக்கிறது ஆனால் உத்திரபிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களில் அதிக நிதி கொடுக்கிறது ஆனால் தமிழகத்திற்கு குறைந்த அளவு வழங்கினார். இதனால் தமிழகத்திற்கு சிறப்பாக செய்யும் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும்

2010ம் ஆண்டு இந்திய முழுவதும் நீட் தேர்வு வந்தது ஆனால் கலைஞர் முதல்வராக இருந்த போது தமிழகத்தில் நீட் தேர்வு வரவில்லை பிறகு ஜெயலலிதா இருந்த போது நீட் தேர்வு வரவில்லை அதன் பிறகு எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த போது நீட் தேர்வு கொண்டு வந்து அனிதா உட்பட 22குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். நீட் தனியார் பயிற்சி வகுப்புக்கு செல்ல பணம் இல்லை.

இந்திய கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு விலக்கு பெற திமுக தலைவர் ஸ்டாலின் உறுதி கொடுத்துள்ளார்

2021ம் ஆண்டு சொன்னபடி நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு பெற அனைத்து சட்டரீதியான திமுக நடவடிக்கை எடுத்தது. ஆனால் ஆளுநர் ஒத்துழைப்பு நடவடிக்கை எடுக்கவில்லை.  தமிழகத்தின் உரிமைகளை மீட்க வரும் 19ம் தேதி வாக்களிக்க வேண்டும்,தமிழகத்தில் உள்ள அருந்ததியர் மக்களுக்கு 3%இடஒதுக்கீடு கொடுத்தவர் கருணாநிதி. சென்னை தென் மாவட்டங்களில் பேரிடர் போது நிதியுதவி வழங்கினார் முதல்வர். ஆனால் ஒன்றிய அரசு பேரிடர் நிதியாக 36 ஆயிரம் கோடி ரூபாய் கேட்டும் தரவில்லை .

இவ்வாறு அவர் பேசினார்.

மாவட்ட செயலர் மதுரா செந்தில், நகராட்சி தலைவர் விஜய்கண்ணன், தெற்கு நகர பொறுப்பாளர் ஞானசேகரன், உள்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றனர்.

Similar News