கார் டயர் வெடித்ததில் ஓட்டுநர் உட்பட கல்லூரி மாணவிகள் 10 பேர் படுகாயம்..!
குமாரபாளையம் அருகே கார் டயர் வெடித்ததில் ஓட்டுநர் உட்பட கல்லூரி மாணவிகள் 10 பேர் படுகாயமடைந்தனர்.;
கார் டயர் வெடித்ததில் ஓட்டுநர் உட்பட கல்லூரி மாணவிகள் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.
குமாரபாளையம் அருகே கார் டயர் வெடித்ததில் ஓட்டுநர் உட்பட கல்லூரி மாணவிகள் 10 பேர் படுகாயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சியிலிருந்து கோவை நோக்கி ஆக. 1ல் கள்ளக்குறிச்சி, விழுப்புரம் உள்ளிட்ட பல ஊர்களை சேர்ந்த மாணவிகளை ஏற்றிக்கொண்டு, கார் ஒன்று வந்தது. அந்த கார் நேற்று மாலை 05:30 மணியளவில் குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் தனியார் கல்லூரி அருகே வந்து கொண்டிருந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக காரின் டயர் வெடித்ததில் கார் தலைக்குப்புற கவிழ்ந்தது. இதில் மாணவிகள், தர்சினி, (17), மகேஸ்வரி, (18), சாதனா, (17), ஆர்த்தி, (18), சபீனா, (18), கிருஷ்ணவேணி, (17), உஷாராணி, (17), சகுந்தலா, (17), சாருலதா, (18), செண்பகவல்லி, (17), ஆகிய 10 பேரும், கார் ஓட்டுனர் கள்ளகுறிச்சியை சேர்ந்த தேவராஜ், (35) என்பவரும் படுகாயமடைந்தனர்.
இவர்களை அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.