இரண்டு கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் படுகாயம்
குமாரபாளையத்தில் கார் மீது கார் மோதிய விபத்தில் இரு பெண்கள் படுகாயமடைந்தனர்.;
ஈரோடு மாவட்டம் , வெள்ளி திருப்பூர் பகுதியில் வசிப்பவர் சந்திரா, 36. இவரும், இவரது தாயார் பழனியம்மாள், 55, இருவரும் நேற்றுமுன்தினம் உறவினர் வீட்டு திருமண விஷேசத்திற்கு சென்று விட்டு, பஸ் ஏறுவதற்காக மாலை 01:30 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் செல்ல சாலையை நடந்து கடந்தனர். அப்போது சேலம் பக்கமிருந்து வந்த காரின் ஓட்டுனர் இவர்கள் சாலையை கடப்பதை கண்டு காரை நிறுத்தினார்.
ஆனால் இந்த காரின் பின்னால் இடைவெளி இல்லாமல் வேகமாக வந்த மற்றோரு கார், முன்னால் நின்ற கார் மீது மோதியது. சாலையை கடந்த பெண்கள் இருவர் மீதும் கார் மோதியது. இதில் இருவரும் கால்களில் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த இருவரும் அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கார் ஓட்டுனர் ஈரோடு மாவட்டம், ஆர்.என். புதூரை சேர்ந்ஹா மோகன கண்ணன், 57, என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.