டூவீலர்கள் மெக்கானிக் சங்கம் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் டூவீலர்கள் மெக்கானிக் சங்கம் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.;

Update: 2025-04-12 12:40 GMT

 டூவீலர்கள் மெக்கானிக் சங்கம் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு

குமாரபாளையம் டூவீலர்கள் மெக்கானிக் சங்கம் சார்பில் காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.

குமாரபாளையம் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில், காளியம்மன் திருவிழாவையொட்டி, காளியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. தலைவர் ராஜகணபதி தலைமை வகித்தார். காவிரி ஆற்றிலிருந்து மேள தாளத்துடன் தீர்த்தக்குட ஊர்வலம் முக்கிய வீதிகளின் வழியாக வந்து, கோவிலில் நிறைவு பெற்றது. பக்தர்கள் அக்னி சட்டி எடுத்தவாறும், அலகு குத்தியவாறும் வந்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார, ஆராதனைகள் நடத்தப்பட்டது. பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

படவிளக்கம் : 

குமாரபாளையம் இரு சக்கர வாகன பழுது பார்ப்போர் உரிமையாளர்கள் நல சங்கம் சார்பில், காளியம்மன் திருவிழாவையொட்டி, தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

Similar News