குமாரபாளையத்தில் டூ வீலர்கள் மோதிய விபத்தில் ஒருவர் கைது

குமாரபாளையத்தில் டூ வீலர்கள் மோதிய விபத்தில் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-09-25 12:15 GMT

குமாரபாளையம் சடையம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மோகன்குமார், (வயது42.) கூலி தொழிலாளி. இவரது யமஹா ரே வாகனத்திற்கு பெட்ரோல் போட வேண்டி இவர் ராஜம் தியேட்டர் அருகே வந்த போது, இவருக்கு பின்னால் வேகமாக வந்த ஹீரோ ஹோண்டா வாகன ஓட்டுனர் இவரது வாகனத்தின் மீது மோத, மோகன்குமார் பலத்த காயமடைந்து, பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வழக்குபதிவு செய்து, ராஜம் தியேட்டர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சக்திவேல்,( 48, )என்பவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News