டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயம்

குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயடைந்தனர்.;

Update: 2025-04-16 11:24 GMT

டூவீலர்கள் மோதிய விபத்தில்

மூவர் படுகாயம்


குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் மூவர் படுகாயடைந்தனர்.

குமாரபாளையம் ஆலங்காட்டுவலசு பகுதியில் வசிப்பவர் ரவி, 60. விசைத்தறி கூலி. இவரது மனைவி சுமதி, 52. இருவரும் நேற்றுமுன்தினம் காலை 10:45 மணியளவில், பவானி கூடுதுறை கோவிலுக்கு, டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் சென்று விட்டு, திரும்ப வீட்டிற்கு வர, பழைய காவிரி பாலத்தின் மீது வந்து கொண்டிருந்தனர். அப்போது, இவர்களுக்கு பின்னால் வந்த பல்சர் வாகனத்தின் ஓட்டுனர், இவர்கள் வந்த வாகனம் மீது வேகமாக மோதியதில், இருவரும் பலத்த காயமைடைந்தனர். இவர்கள் பவானி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். போலீசார் விசாரணையில், பல்சர் வாகன ஓட்டுனர் பவானியை சேர்ந்த பிரதீப், 29, என்பதும், இவர் தனியார் நிறுவன பணியாளர் என்பதும் தெரியவந்தது. பிரதீப், பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News