டூவீலரை அடித்து உடைத்து, பெண்ணின் ஆடையை கிழித்த நபரை தேடும் போலீசார்
குமாரபாளையம் அருகே டூவீலரை அடித்து உடைத்து, பெண்ணின் ஆடையை கிழித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.;
டூவீலரை அடித்து உடைத்து, பெண்ணின் ஆடையை கிழித்த நபரை தேடும் போலீசார்
குமாரபாளையம் அருகே டூவீலரை அடித்து உடைத்து, பெண்ணின் ஆடையை கிழித்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
குமாரபாளைய,ம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் வைத்து வந்தவர் அன்பரசன், 40. கட்டிட மேஸ்திரி. இவர் நேற்றுமுன்தினம் மதியம் 12:30 மணியளவில் வீட்டிற்கு சாப்பிட வந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி மனோஜ், என்பவர் அங்கு வந்து, கட்டிட வேலை இருந்தால் சொல்ல சொல்லி கேட்டுள்ளார். அதற்கு அன்பரசன், வேலை இருந்தால் சொல்கிறேன் என்று கூற, ஆத்திரமடைந்த மனோஜ் தனக்கு பிச்சை போடுகிறாயா? என்று கேட்டு, வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த டூவீலரை அடித்து உடைத்துள்ளார். இதனை தட்டிக்கேட்ட அன்பரசனை, மூக்கின் மேல் கையால் குத்தியும், ஈருகோதி மூலம் வயிறு மற்றும் பின் தலை ஆகிய பகுதியில் குத்திவிட்டு ,தப்பியோடி விட்டான். அன்பரசனை, அங்கிருந்து குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். இவரது மனைவி வேலைக்கு சென்ற போது, குற்றவாளி, மனோஜ் வழிமறித்து, கணவர் எங்கே என்று கேட்டு, அவரது ஆடையை கிழித்துள்ளார். iஇது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய மனோஜ் ஐ தேடி வருகின்றனர்.