குமாரபாளையம் அருகே வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட டூவீலர் திருட்டு

குமாரபாளையம் அருகே வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட டூவீலர் திருடப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2021-10-01 13:00 GMT

பைல் படம்.

குமாரபாளையம் காவேரி நகரில் வசிப்பவர் கணபதி, 24. விசைத்தறி கூலித்தொழிலாளி. இவர்  தன் வீட்டின் முன்பு  தனது பஜாஜ் பல்சர் என்ற வாகனத்தை நிறுத்தி விட்டு தூங்க சென்று விட்டார்.

மறுநாள் காலை 6 மணியளவில் வெளியில் வந்து பார்த்த போது, நிறுத்தி வைக்கப்பட்ட வாகனத்தை காணவில்லை. இதன் மதிப்பு 45 ஆயிரம் என கூறபடுகிறது.

இது குறித்து புகாரின் பேரில் குமாரபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து காணாமல் போன டூவீலரை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News