குமாரபாளையம் அருகே இருசக்கர வாகனம் திருட்டு - போலீசார் விசாரணை

குமாரபாளையம் அருகே, இருசக்கர வாகனம் திருட்டு போனது தொடர்பாக, போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-11-25 11:15 GMT

குமாரபாளையம் காவல் நிலையம் - கோப்பு படம் 

ஈரோடு மாவட்டம், கேசரிமங்கலத்தை சேர்ந்தவர் மாதேஸ்வரன், 31. தனியார் நிறுவன பணியாளர். நவ. 11ல் குமாரபாளையம் வட்டமலைப்பகுதியில் உள்ள  ஜே.கே.கே. பல் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு வந்தார். இவரது, ஹீரோ ஸ்பிலெண்டர் டூவீலரை மருத்துவமனை முன்பு நிறுத்தி பூட்டு போட்டதாகவும், சிகிச்சை பெற்று வந்த பின்னர் பார்த்தபோது, டூவீலரை காணவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இரு சக்கர வாகனத்தை பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், இதுகுறித்து குமாரபாளையம் போலீசில் புகார் செய்தார். இது குறித்து,  இன்ஸ்பெக்டர் ரவி, எஸ்.ஐ. மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை வருகின்றனர்.

Tags:    

Similar News