பேட்டரி வாகனங்களால் டூவீலர் மெக்கானிக் தொழில் பாதிப்பு அபாயம்

குமாரபாளையம் நகரில் பேட்டரி வாகனங்களால் டூவீலர் மெக்கானிக் தொழில் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.;

Update: 2025-01-08 15:45 GMT

படவிளக்கம் :

குமாரபாளையம் நகரில் பேட்டரி வாகனங்களால் டூவீலர் மெக்கானிக் தொழில் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது என டூவீலர் மெக்கானிக்குகள் கூறி வருகின்றனர். (ராமன் )

பேட்டரி வாகனங்களால் டூவீலர் மெக்கானிக் தொழில் பாதிப்பு அபாயம் - குமாரபாளையம் நகரில் பேட்டரி வாகனங்களால் டூவீலர் மெக்கானிக் தொழில் பாதிப்பு அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து டூவீலர் மெக்கானிக் ராமன் கூறியதாவது:

நாமக்கல் மாவட்டத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட டூவீலர் மெக்கானிக் பட்டறைகள் உள்ளன. குமாரபாளையம் நகரில் 70 க்கும் மேற்பட்ட டூவீலர் மெக்கானிக் பட்டறைகள் செயல்பட்டு வருகிறது. இதனை நம்பி இவர்களது குடும்பத்தினர் மற்றும் இதனை சார்ந்த ஆட்டோ மொபைல்ஸ்,பஞ்சர், கேஸ் வெல்டிங், உள்ளிட்ட தொழில் செய்வோர் ஆயிரத்திற்கும் மேலானவர்கள் வசித்து வருகின்றனர். தற்போது பேட்டரி டூவீலர்கள் விற்பனைக்கு அதிக அளவில் வந்து கொண்டுள்ளது. இவைகள் மிக குறுகிய காலத்தில் அதிக விற்பனையாகும் நிலை உருவாகும். அப்போது டூவீலர் மெக்கானிக் தொழில் மிகவும் நலிவடையும். இதனை நம்பி உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் குடும்பத்தினர் வாழ்வாதாரம், குழந்தைகளின் கல்வி, திருமணம், மருத்துவ சிகிச்சை உள்ளிட்ட அனைத்தும், கேள்விக்குறியாகும். இதே போல் பெட்ரோல் பங்க் நிறுவனத்தார், சார்ஜ் போடும் நிலையங்களுக்கு ஆட்சேபம் செய்வார்கள். தங்கள் தொழில் பாதிக்கும் என..இது குறித்து பரிசீலனை செய்து எங்கள் வாழ்வாதாரம் பாதிக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இலவச வீட்டுமனை, இழப்பீட்டு தொகை, எங்கள் குழந்தைகளின் கல்விச் செலவு ஆகியவைகளை அரசு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News