டூவீலர், போலீரோ பிக்கப் வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் இருவரும் படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலர், போலீரோ பிக்கப் வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் இருவரும் படுகாயமடைந்தனர்.;
டூவீலர், போலீரோ பிக்கப் வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் இருவரும் படுகாயம்
குமாரபாளையம் அருகே டூவீலர், போலீரோ பிக்கப் வேன் மோதிய விபத்தில் தந்தை, மகன் இருவரும் படுகாயமடைந்தனர்.
திருப்பூர், வரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், 32. டைலர். இவரும் இவரது அப்பா ஜீவா, 54, இருவரும், குமாரபாளையத்தில் உள்ள தன் உறவினரை பார்த்து விட்டு, திரும்ப சொந்த ஊருக்கு போக, சேலம் கோவை புறவழிச்சாலையில், கோட்டைமேடு அருகே சர்வீஸ் சாலையில், நேற்றுமுன்தினம் மாலை 04:00 மணியளவில் தனது பஜாஜ் டிஸ்கவர் டூவீலரில், அப்பா ஜீவாவை பின்னால் உட்கார வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார். சாலை வளைவில் செல்ல முயன்ற போது, அவ்வழியே வேகமாக வந்த போலீரோ பிக் அப் வாகனம், டூவீலரில் மோதியதில், டூவீலரில் வந்த இருவரும் பலத்த காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார், விபத்துக்கு காரணமான போலீரோ வாகன ஓட்டுனர் குமாரபாளையம், குப்பாண்டபாளையம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 23, என்பவரை கைது செய்தனர்.