டூவீலர்கள் மோதிய விபத்தில் வங்கி மேலாளர் உள்பட இருவர் படுகாயம்!

குமாரபாளையம் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் வங்கி மேலாளர் உள்பட இருவர் படுகாயமடைந்தனர்.;

Update: 2023-06-13 03:00 GMT

டூவீலர்கள் மோதிய விபத்தில் வங்கி மேலாளர் உள்பட இருவர் படுகாயம்

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வங்கி மேலாளர் உள்பட இருவர் படுகாயமடைந்தனர். 

குமாரபாளையம் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தால் உயிர் சேதம் எதுவும் இல்லாத போதிலும்,  இரு சக்கர வாகனங்கள் வேகமாக வந்து மோதியதில் வங்கி மேலாளர் உள்பட இருவர் படுகாயமடைந்தனர்.

பள்ளிபாளையம் அக்ரஹாரம் பகுதியில் வசிப்பவர் பிரசாந்த். இவருக்கு வயது 29. பவானியில் ஸ்டேட் வங்கியில் கிளை மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த ஜூன் 12ம் தேதி பணி முடிந்து இரவு 10:00 மணியளவில் யமஹா பைக்கில் வீட்டுக்கு திரும்பிக்கொண்டு இருந்தார்.

அதே நேரம்,  எதிர் திசையில் ஹீரோ ஸ்ப்லேண்டர் வண்டியில் ஒருவர் வந்துகொண்டிருந்திருக்கிறார். அதே சாலையில் பயணித்துக் கொண்டிருந்த லாரியை முந்தி செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில்,  டூவீலர் ஓட்டுனர், முன்னால் செல்ல  வேகமாக வந்துள்ளார். எதிர் பாராத நேரத்தில் இரு பைக்குகளும் நேருக்கு நேர் வர, கண்ணிமைக்கும் நேரத்தில் பிரேக் பிடிக்க முடியாததால் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டதில் இருவரும் படுகாயமடைந்தனர்.

போலீஸ் விசாரணையில் எதிரே வந்த நபர் பவானி அருகே உள்ள சித்தோடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி, கலையரசன், 22, என்பது தெரியவந்தது. தற்போது இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Tags:    

Similar News