குமாரபாளையம் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதியதில் இருவர் படுகாயம்
குமாரபாளையம் அருகே நடந்து சென்றவர் மீது டூவீலர் மோதியதில் இருவர் படுகாயமடைந்தனர்.;
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் குளத்துகாடு பகுதியில் வசித்து வருபவர் கலாமணி(வயது 57.) தறி கூலி தொழிலாளி. நேற்றுமுன்தினம் இரவு 10மணியளவில் அதே பகுதியில் சாலையை கடக்கும் போது, டி.வி.எஸ். எக்ஸல் வாகனத்தில் வந்த நபர், பெண்ணின் மீது மோதியதில், பெண்ணுக்கும், கீழே விழுந்ததில் டூவீலர் ஓட்டுனருக்கும் காயங்கள் ஏற்பட்டன. குமாரபாளையம் போலீசார் விசாரணையில், டூவீலர் ஓட்டுனர் பெயர் பன்னீர்செல்வம், (வயது55,) மில் கூலி தொழிலாளி என்பது தெரியவந்தது. இருவரும் ஈரோடு ஜி.ஹெச்.ல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.