குமாரபாளையத்தில் 2 ஆடுகள் திருடியதாக பெண் உட்பட இருவர் கைது

குமாரபாளையத்தில் ஆடுகள் திருடியதாக பெண் உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2022-04-11 13:45 GMT

குமாரபாளையத்தில் காணாமல் போன ஆடுகள் இரண்டும் உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு, வீரப்பம்பாளையம் கிராமத்தில் வசிப்பவர் வெங்கட்ராஜ், 53, நாடா உற்பத்தி தொழில். இவரும், இவரது மகள் பவித்ராவும் நேற்று முன்தினம் இரவு 09:00 மணிக்கு தூங்க சென்றுள்ளனர்.

ராமேஸ்வரம், திருசெந்தூர் சென்று வீடு திரும்பிய வெங்கட்ராஜ் மனைவி, மகன் இரவு 11:00 மணியளவில் பார்த்த போது, வீட்டின் முன்பு கட்டி வைத்திருந்த 2 ஆடுகளை காணவில்லை. ஊர் பொதுமக்கள் சேர்ந்து தேடி பார்க்கையில், கத்தேரி பிரிவு பகுதியில் சந்தேகப்படும்படி டெம்போ ஒன்று நிற்பது கண்டு, அங்கு சென்று பார்க்கையில், காணாமல் போன ஆடுகள் இரண்டும் டெம்போவில் இருந்தது. அதில் இருந்த ஆண்,பெண் இருவரையும், போலீசில் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில், அவர்கள் குமாரபாளையம், ராஜ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்த மோகன், 32, என்பதும், குளத்துக்காடு பகுதியை சேர்ந்த கவுதமி, 32, என்பதும் தெரியவந்தது. இருவரும் கைது செய்யப்பட்டு, ஆடுகள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சில நாட்களுக்கு முன்பு இதே ஊரில் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் ஒன்று சேர்ந்து ராமேஸ்வரம், திருச்செந்தூர் சென்றனர். பெரும்பாலோர் யாத்திரை சென்றதை அறிந்த சமூக விரோதிகள் இருவரும் ஆடுகளை திருடியுள்ளனர்.

Tags:    

Similar News