டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளர்கள் இருவர் படுகாயம்!
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.;
டூவீலர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளர்கள் இருவர் படுகாயம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கூலித் தொழிலாளர்கள் இருவர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், தாரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் மாரியப்பன், 39, முருகன், 43. கல் உடைக்கும் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் நேற்றுமுன்தினம் மாலை 02:15 மணியளவில், சேலம் கோவை புறவழிச்சாலை வழியாக, வட்டமலை தனியார் கல்லூரி அருகே ஹீரோ ஸ்ப்லேண்டர் புரோ வாகனத்தில் பவானியிலிருந்து தாரமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது இவர்கள் பின்னால் வந்த அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் இவர்கள் வந்த டூவீலர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் படுகாயமடைந்தனர். இவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தனர். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கு காரணமான வாகனம் பற்றி விசாரணை செய்து வருகிறார்கள்.