லாரி, டெம்போ மோதிய விபத்தில் இருவர் படுகாயம்; ஒருவர் கைது
குமாரபாளையம் அருகே லாரி, டெம்போ மோதிய விபத்தில் இருவர் படுகாயம்; ஒருவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் குருப்பநாயக்கன்பாளையத்தில் வசிப்பவர் கிருஷ்ணகுமார், 21,லோடுமேன். திருப்பூர் அவினாசிபாளையத்தில் மினி டெம்போ வைத்து தொழில் செய்து வருபவர் திருமலைசாமி, 26.
நேற்றுமுன்தினம் இரவு திருப்பூர் எஸ்.ஆர்.எஸ். பவுல்டரி நிறுவனத்திற்காக, கோழிகள், கடைகள் லோடு ஏற்றிக்கொண்டு, சென்னையில் இறக்கி விட்டு, திருப்பூருக்கு நேற்று முன்தினம் இரவு 11:55 மணிக்கு, சேலம் கோவை புறவழிச்சாலையில் குமாரபாளையம் அருகே நேரு நகர் பஸ் நிறுத்தம் அருகே இருவரும் மினி டெம்போவில் திரும்ப வந்து கொண்டிருந்தனர்.
அப்போது முன்னால் சென்ற ஈச்சர் வாகன ஓட்டுனர் திடீரென்று ப்ரேக் போட்டு வாகனத்தை நிறுத்த, திருமலைசாமியும், தனது வாகனத்தை நிறுத்தியுள்ளார், ஆனால் மினி டெம்போ பின்னால் வேகமாக வந்த டாரஸ் லாரி, மினி டெம்போ மீது மோதியதில் இருந்த இருவரும் படுகாயமடைந்தனர்.
இவர்கள் இருவரும் திருப்பூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். குமாரபாளையம் போலீசார் இது குறித்து வழக்குபதிவு செய்து டாரஸ் வாகன ஓட்டுனர் ராமநாதபுரத்தை சேர்ந்த முத்துசெல்வன், 37, என்பவரை கைது செய்தனர்.