குமாரபாளையம் அருகே கார்- டூவீலர் மோதி விபத்து: இருவர் படுகாயம்
குமாரபாளையம் அருகே கார், டூவீலர் மோதிய விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்ததனர்.;
குமாரபாளையம் காவல் நிலையம்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அருகே பல்லக்காபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் ஹரிகிருஷ்ணன், 24, முருகன், 36, இவர்கள் பெயிண்டிங் கூலித் தொழிலாளிகள்.
இந்நிலையில் நேற்று காலை 09:15 மணியளவில் ஹரிகிருஷ்ணன் தனது ஸ்ப்லேண்டர் பிளஸ் டூவீலரை ஓட்ட, முருகன் பினனால் உட்கார்ந்து வந்துகொண்டிருந்தனர். சேலம் கோவை புறவழிச் சாலையில் நேரு நகர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த சைலோ கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.
இதனையடுத்து காயமடைந்த அவர்களை சிகிச்சைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து கோவை, சிங்காநல்லூரை சேர்ந்த கார் ஓட்டுனர் ராஜா, 36, என்பவரை பிடித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.