பள்ளிபாளையம் காவிரியில் நீரில் மூழ்கி இருவர் சாவு: போலீசார் விசாரணை
பள்ளிபாளையம் காவிரியில் குளித்துக்கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.;
ஈரோடு பகுதியை சேர்ந்தவர்கள் ரோகித், 14, மற்றும் பிரகாஷ், 18. பெயிண்ட்டிங் வேலை செய்து வந்தனர்.
இவர்கள் இருவரும் இன்று (17ம் தேதி) மாலை 4.40 மணியளவில் பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குளிக்க சென்றனர். ஆழமான பகுதிக்கு சென்று குளித்துக்கொண்டிருந்த அவர்கள் திடீரென நீரில் மூழ்கினர்.
இதனையடுத்து வெப்படை தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படையினர் மற்றும் மீனவர்கள் இருவரின் சடலங்களை மீட்டனர்.
இது குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.