தனியார் மில் பெண் பலாத்காரம்: போக்சோவில் இருவர் கைது

பள்ளிபாளையம் அருகே வெப்படை தனியார் மில் இளம் பெண் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் போக்சோவில் இருவர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2022-04-24 15:00 GMT
தனியார் மில் பெண் பலாத்காரம்: போக்சோவில் இருவர் கைது
  • whatsapp icon

பள்ளிபாளையம் அருகே வெப்படை தனியார் ஸ்பின்னிங் மில்லில் 16 வயது இளம் பெண் பணியாற்றி வந்தார். இவர் வெப்படை பகுதியில் கட்டிட டிரிலிங் பணியாற்றும் ராஜு, 21, என்ற நபரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

பெண்ணிடம் செல்போன் இல்லாததால் அவ்வப்போது பலரிடம் போன் வாங்கி ராஜூவிடம் பேசி வந்துள்ளார். சம்பவத்தன்று இரவு ஷிப்ட்-க்கு வர வேண்டியவர், ராஜுவிடம் பேச வேண்டி இரவு 02:00 மணி வரை மில்லின் முன்பு காத்திருந்ததாக கூறப்படுகிறது.

அதன்பின் செல்போன் கொடுத்து உதவிய இரு நபர்கள் அந்த பெண்ணை டூவீலரில் ஏற்றிக்கொண்டு சென்று, இருவரும் அந்த பெண்ணை பலாத்காரம் செய்ததாக தெரிகிறது.

இது குறித்து வெப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு ஐயன்துரை மற்றும்  விஜய் ஆகிய இருவரையும் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Tags:    

Similar News