தவெக மாநாட்டையொட்டி கொடியேற்று விழா!
தவெக மாநாட்டையொட்டி குமாரபாளையத்தில் கொடியேற்று விழா நடந்தது.;
த.வெ.க. மாநாட்டையொட்டி கொடியேற்று விழா
த.வெ.க. மாநாட்டையொட்டி குமாரபாளையத்தில் கொடியேற்று விழா நடந்தது.
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அக். 27ல் மாநாடு நடைபெறவுள்ளது. த.வெ.க. மாநாட்டையொட்டி குமாரபாளையத்தில் கொடியேற்று விழா நகர தலைவர் சக்திவேல் தலைமையில் நடந்தது. தவடப்பாடி, சுந்தரம் நகர், ஆனங்கூர் பிரிவு சாலை, ஓலப்பாளையம் ஆகிய 5 இடங்களில் நடந்த இந்த விழாவில் , மாவட்ட தலைவர் சதீஷ் பங்கேற்று, பெயர் பலகையை திறந்து வைத்து, கட்சிக்கொடியேற்றி வைத்தார். பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. மாநில நிர்வாகி விஜயலட்சுமி, மாவட்ட செயலர் பாலா, நிர்வாகிகள் ரமேஷ், மோகன்ராஜ், கார்த்தி, உள்பட பலர் பங்கேற்றனர்.