குமாரபாளையம் அருகே கிரேன் வண்டி மீது லாரி மோதி விபத்து: மூவர் படுகாயம்
குமாரபாளையம் அருகே கிரேன் வண்டி மீது லாரி மோதிய விபத்துக்குள்ளானதில் மூவர் படுகாயமடைந்தனர்.;
லாரி மோதி கவிழ்ந்து கிடக்கும் கிரேன் வண்டி.
குமாரபாளையம் அருகே குப்பாண்டபாளையத்தை சேர்ந்தவர் வெங்கடாசலம், 45, கிரேன் வண்டி ஓட்டுனர். பவானி அருகே வரதநல்லூரை சேர்ந்தவர் சுந்தரம், 52. கூலி. நேற்று மாலை 01:30 மணியளவில் கிரேன் வண்டியை வெங்கடாசலம் ஓட்ட, சுந்தரம் அதே வண்டியில் உட்கார்ந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது வேகமாக வந்த லாரி ஒன்று இந்த கிரேன் மீது மோதியதில் கிரேன் வாகனம் கவிழ்ந்தது. இதில் இருந்த இருவரும் படுகாயமடைந்தனர். குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, லாரி ஓட்டுநர் உள்ளிட்ட மூவரையும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
விசாரணையில் லாரி ஓட்டுனர் நாமக்கல், கருமானூரை சேர்ந்த பொன்னாமலை, 45, என்பது தெரியவந்தது. லாரி ஓட்டுநரும் காயமடைந்ததால் இவர் குமாரபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.