தனி மயானம் கேட்டு முத்தரப்பு பேச்சு வார்த்தை

குமாரபாளையத்தில் தனி மயானம் கேட்டு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது.;

Update: 2024-05-29 14:45 GMT

குமாரபாளையத்தில் தனி மயானம் கேட்டு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது. (மாதிரி படம்)

குமாரபாளையத்தில் தனி மயானம் கேட்டு முத்தரப்பு பேச்சு வார்த்தை நடந்தது.

பள்ளிபாளையம் அருகே வெப்படையிலிருந்து ஆனங்கூர் செல்லும் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்புகள் ஏற்பட்டு வந்தன. இதனை தடுக்கும் விதமாக அப்பகுதி பொதுமக்கள் நேற்றுமுன்தினம் சாலைமறியலில் ஈடுபட்டனர். மேலும் அப்பகுதியில் தனி மயானம் வேண்டியும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இது தொடர்பாக குமாரபாளையம் தாசில்தார் அலுவலகத்தில், தாசில்தார் சண்முகவேலு தலைமையில் பேச்சு வார்த்தை நடந்தது.

இது குறித்து தாசில்தார் சண்முகவேலு கூறியதாவது:

அப்பகுதியில் 16 சிறிய கிராமங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ளவர்களுக்கான மயானம் உள்ளது. ஆனால் குறிப்பிட்ட சமுதாய மக்களுக்காக தனி மயானம் கேட்டனர். அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருவதால், வேகத்தடை அமைக்க வேண்டும் என்றனர். இது குறித்து மாவட்ட கலெக்டர் வசம் எடுத்து சொல்லி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சமாதான பேச்சுவார்த்தை 

பள்ளிபாளையத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால், தாசில்தார் தலைமையில் குமாரபாளையம் தாலுக்கா அலுவலகத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது.

இது குறித்து தாசில்தார் சண்முகவேல் கூறியதாவது:

பள்ளிபாளையம் நகராட்சிக்குட்பட்ட நிலம், எலந்தகுட்டை பகுதியில் உள்ளது. இங்கு, பள்ளிபாளையத்தில் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர், சுத்திகரிப்பு செய்ய, பிளான்ட் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் பலர் அங்கு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது. கழிவுநீருடன், சாயக்கழிவு நீரும் சேர்ந்து வருவதால், இந்த சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதன் மூலம், இங்குள்ள நிலத்தடி நீர் மாசுபடும், விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும். எனவே இங்கு பிளாண்ட் அமைக்க அனுமதிக்க மாட்டோம் என்றனர். இது குறித்து ஆர்.டி.ஓ.க்கு அறிக்கை அனுப்பப்பட்டு, மீண்டும் ஒரு தேதியில் ஆர்.டி.ஓ. தலைமையில் பேச்சு வார்த்தை நடைபெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News