மைதானத்தில் உயிரிழந்த கபடி வீரருக்கு அஞ்சலி
கபடி வீரர் விமல்ராஜ் மறைவுக்கு குமாரபாளையத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.;
கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், காடம்புலியூர் அருகில் புறங்கனி கபடி அணியை சேர்ந்த வீரர் விமல்ராஜ், விளையாடிக்கொண்டு இருக்கும்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து கபடி களத்திலேயே உயிரிழந்தார்..
இவரது மறைவுக்கு குமாரபாளையம் தெரசா கபடி குழுவின் சார்பில் முனிராஜ், துரை தலைமையில் மவுன அஞ்சலி செலுத்தி, அவரது திருவுருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் பல்வேறு விளையாட்டு வீரர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.