வாய்க்காலில் விழுந்த மரம் : அகற்ற விவசாயிகள் கோரிக்கை..!
குமாரபாளையம் அருகே வாய்க்காலில் மரம் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் அதனை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.;
வாய்க்காலில் விழுந்த மரத்தை அகற்ற விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே வாய்க்காலில் மரம் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் அதனை அகற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.
குமாரபாளையம் அருகே கல்லங்காட்டுவலசு பகுதியில் இரு நாட்கள் முன்பு மேட்டூர் கிழக்கு கரை வாய்க்காலில் பெரிய மரம் ஒன்று முறிந்து விழுந்துள்ளது. இதனால் வாய்க்காலில் வரும் குப்பைகள் தேங்கி துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தண்ணீர் செல்வது தடை பட்டு வருவதால், விவசாயிகள் அதிருப்தியடைந்து வருகிறார்கள். இது குறித்து பொதுப்பணித்துறையினர் வசம் சொல்லியும் பலனில்லை என்பதால், உடனே இந்த மரத்தை அகற்றி எளிதில் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சிட உதவிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வடகிழக்கு பெருமழை தொடங்கியுள்ள நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையம் உருவானது. அதனால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழைவெள்ளம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை துரிதப்படுத்தி அங்கங்கு வெள்ளநீரை வடியச்செய்து நடவடிக்கை எடுத்தது. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் பகுதியிலும் கனமழை பெய்து பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்ப்பட்டனர். மாவட்ட நிர்வாகமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் துரிதமாக ஈடுபட்டனர்.