குமாரபாளையம்: மின்மாற்றியை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் விபத்து அபாயம்
குமாரபாளையத்தில் மின்மாற்றியை சுற்றி தேங்கி நிற்கும் மழை நீரால் மின் விபத்து அபாயம் உள்ளது.;
குமாரபாளையம் ஜி.எச். முன்பு தேங்கியுள்ள மழை நீரால் விபத்து அபாயம் உள்ளது.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அரசு மருத்துவமனை முன்பு, மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையின் சுற்றுச்சுவரை ஒட்டினார் போல் வடிகால் புதிதாக அமைக்கப்பட்டது. இந்த பணியின் போது மின் மாற்றி அருகே பள்ளம் ஏற்பட்டது.
இதனால், மழை பெய்யும் போது, இந்த பள்ளத்தில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், இந்த வழியாக தினசரி காய்கறி மார்க்கெட் நடந்து செல்லும் பொதுமக்கள், இந்த தண்ணீரில் கால் வைத்து சென்று வருகிறார்கள். மின் கசிவு ஏற்பட்டு, இந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்து அசம்பாவிதம் ஏற்படும் முன், இங்கு மழை நீர் தேங்காதபடி இடத்தை சீரமைக்க வேண்டும் என்று, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.