குமாரபாளையத்தில் ஒரே சமயத்தில் திரண்ட திமுக., அதிமுகவினரால் போக்குவரத்து பாதிப்பு
குமாரபாளையத்தில் ஒரே சமயத்தில் திரண்ட திமுக., அதிமுகவினரால் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.
குமாரபாளையத்தில் காவிரி வெள்ள பாதிப்புகள் பார்வையிட்டு நலத்திட்ட உதவிகள் செய்ய தி.மு.க. அமைச்சர்கள் நேரு, மதிவேந்தனும், முன்னாள் முதல்வர் இடைப்பாடி பழனிசாமியும் வந்தனர்.
இரு தரப்பினரும் தங்கள் தலைவர்களை வரவேற்க சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவில் திரண்டனர். சாலையின் நடுவே வந்ததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றன. போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் படுத்தினர்.
தி.மு.க. நகர செயலர் செல்வம் சாலையை கடந்து சென்று, அ.தி.மு.க.வினரிடம் சாலை ஓரமாக நின்று வரவேற்பு கொடுங்கள். எங்கள் அமைச்சர் கார் அருகில் வந்துவிட்டது. இப்படி போக்குவரத்தினை தடுத்தால், எந்த வாகனமும் வர முடியாத நிலை ஏற்படும் என கேட்டுக்கொண்டார். அதன்பின் அ.தி.மு.க.வினர் சாலையின் ஓரமாக சென்று நின்றனர்.