குமாரபாளையம் அருகே நடுரோட்டில் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு

குமாரபாளையம் அருகே டீசல் தீர்ந்து நடு வழியில் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2021-09-16 15:00 GMT

குமாரபாளையம் அருகே சேலம் கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவில் டீசல் தீர்ந்து நடு ரோட்டில் நின்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் - சேலம் - கோவை புறவழிச்சாலை கத்தேரி பிரிவு பகுதியில் நேற்று மாலை 5 மணியளவில் டிப்பர் லாரி ஒன்று டீசல் தீர்ந்து நடு ரோட்டிலேயே நின்றது.

இதனால் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு வாகனங்கள் நீண்ட வரிசையில் நின்றது. போக்குவரத்து போலீசார் சம்பவ இடம் வந்து,அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லாரியை சாலையோரம் தள்ளி நிறுத்தினர்.

அப்போது வேறு பணியின் காரணமாக அங்கு வந்த குமாரபாளையம் குற்றபிரிவு எஸ்.ஐ., சுந்தரராஜ், லாரியை தள்ளி ஓரமாக நிறுத்த உதவினார். போலீசார் விசாரணையில் லாரி ஓட்டுனர் ஓமலூரை சேர்ந்த பழனிச்சாமி, 32, என்பதும், இதன் உரிமையாளர் ஜெயராஜா, என்பதும் தெரியவந்தது. ஓட்டுனர் பழனிச்சாமி போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags:    

Similar News