உயரமான லோடு ஏற்றி சென்ற லாரியில் மின் கம்பி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு

குமாரபாளையத்தில் உயரமான லோடு ஏற்றி சென்ற லாரியில் மின் கம்பி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Update: 2023-12-17 01:45 GMT

குமாரபாளையத்தில் உயரமான லோடு ஏற்றி சென்ற லாரியில் மின் கம்பி சிக்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

குமாரபாளையம் இடைப்பாடி சாலை வாரச்சந்தை எதிரில் பழைய இரும்பு சாமான்கள் ஏற்றிய லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. மிக உயரமாக லோடு ஏற்றப்பட்டிருந்ததால், அவ்வழியே சென்ற மின் கம்பிகளில் லாரியில் ஏற்றப்பட்டிருந்த சாமான்கள் அதில் சிக்கியது. அக்கம் பக்கம் இருந்தவர்கள் சத்தம் போடவே, லாரியில் வந்தவர் மேலே ஏறி, சிக்கியிருந்த கம்பிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார்.

அதற்குள் இந்த லாரியின் பின்னால் நீண்ட வரிசையில் வாகனங்கள் போக முடியாத நிலை ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்தில் எதிரில் அமைச்சர் மதிவேந்தன், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டவர்கள் பூமி பூஜைக்கு வரவிருந்ததால், காவல்துறையினர்பாதுகாப்பு பணிக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.

அமைச்சர் வாகனம் வர முடியாமல் போகுமோ என, பதட்டத்தில் காவல்துறையினர் போக்குவரத்தை சீர் செய்து கொண்டிருந்தனர். சுமார் 30 நிமிடத்திற்கும் மேலாக இந்த நிலை நீடித்தது. அமைச்சர் வர தாமதம் ஏற்பட்டதால் ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் போனது. இதனால் காவல்துறையினர் மற்றும் அக்கட்சியினர் நிம்மதியடைந்தனர்.

இந்த சாலையில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால், இது போன்ற நிலையால், பல மணிநேரம் கூட போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதிகாரிகள் ஆய்வு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அதிக உயரமான லோடு ஏற்றி செல்லும் வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் 

Tags:    

Similar News