தொடர் மழையால் விநாயகர் சிலை வியாபாரிகள் கலக்கம்

தொடர் மழை பெய்து வருவதால் விநாயகர் சிலை வியாபாரிகள் கலக்கமடைந்து உள்ளனர்

Update: 2022-08-24 14:00 GMT

குமாரபாளையத்தில்  உள்ள கடையில் விற்பனைக்கு வைக்கப்ட்டுள்ள  விநாயகர் சிலைகள் 

குமாரபாளையத்தில் தொடர்மழை பெய்து வருவதால் விநாயகர் சிலை வியாபாரிகள் கலக்கமடைந்து உள்ளனர்.

குமாரபாளையம் நகரில் பெரிய அளவிலான மற்றும் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் விற்பனை மையங்கள் அதிகம் உள்ளன. தற்போது சில நாட்களாக தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் சிலை வாங்க வரும் பொதுமக்கள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இது பற்றி சிலை வியாபாரிகள் கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி இன்னும் சில நாட்களில் வரவுள்ளது. இந்த ஓரிரு நாட்கள் தான் வியாபாரம் நடக்கும். தொடர்மழை சிலை விற்பனையை பெரிதும் பாதித்து வருகிறது. ஓரிரு நாட்கள் மழை இல்லாமல் இருந்தால் சிலை வியாபாரம் நன்றாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

Similar News